Sunday, 5 July 2015

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள கூடுதல் இடம் ஒதுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஓன்று ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது. அந்த வகையில் தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு உதவிகளை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்.
தற்போது நடப்பாண்டில் தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்ய மத்திய அரசு 2585 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ள நிலையில், மேலும் ஹஜ் பயணம் மேற்கொள்ள கூடுதல் இடம் ஒதுக்குமாறு இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று  முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

No comments:

Post a Comment