Saturday 28 February 2015

ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது

'

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணி மற்றும் புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லாதது திருவாரூர் மக்களிடை யே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுகுறித்து ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர். தெட்சிணாமூர்த்தி கூறியது:
மத்திய அரசின் 2015-2016 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார்.
இதில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணி, திருநெல்வேலி - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு, பாலக்காடு - திருச்சி ரயில் நாகூர் வரை நீட்டிப்பு, விழிப்புரம் - மயிலாடுதுறை ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு.
மன்னார்குடி - சென்னை மற்றும் சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் திருவாரூர் வழியாக இயக்குவது, மன்னார்குடியிலிருந்து புறப்படும் ரயில்கள் திருவாரூர் வழியாக செல்வது உள்ளிட்டவைகளில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமளிக்கும் வகையில் ரயில்வே பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லையென்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும், மத்திய ரயில்வே பட்ஜெட்டில் திருவாரூர் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படும், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை அமைக்கும் பணி, நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், எவ்வித அறிவிப்பும் இல்லாததது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.

No comments:

Post a Comment