Friday 27 February 2015

தபால் நிலையங்களில் அறிமுகம் பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம்



திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும்  செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


பெண் குழந்தைகளை பாதுகாக்க செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அனைத்து தபால் நிலையங்களிலும் தொடங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

இதன்படி இந்த திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் அவருடையை பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான காப்பாளர் கணக்கை தொடங்கலாம்.

ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். 2 பெண் குழந்தைகள் இருந்தால் பெற்றோர் அல்லது காப்பாளர் ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு வீதம் 2 கணக்குகளை தொடங்கலாம். 1 வயது குழந்தைக்கு கணக்கு தொடங்கினால் 10 வயது ஆகும் போது கணக்கு முடிவடையும்.  கணக்கு தொடங்கும் தேதியில் இருந்து குழந்தைக்கு 14 வயது முடிவடையும் வரை கணக்கில் பணம் செலுத்தலாம். அந்த குழந்தைக்கு திருமணம் ஆகும் வரை கணக்கை நீட்டித்து கொள்ளும் வசதி உண்டு.இந்த கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.1000 மற்றும் அதிக பட்சமாக ரூ.1 லட்சம் வரை செலுத்தலாம். குறைந்த பட்சம் ரூ.1000 செலுத்தவில்லை என்றால் குறைந்த பட்ச தொகையுடன் ரூ.50 செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம்.

பணத்தை ரொக்கமாகவோ காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்தலாம். இந்த திட்டத்தில் 9.1 சதிவீதம் வட்டி வழங்கப்படும். வட்டி விகிதத்தை வருடாந்திர அடிப்படையில் மத்திய அரசு அறிவிக்கும். பெண் உயர் கல்விக்காக செலுத்திய தொகையில் 50 சதவீதம் வரையில் எடுத்து கொள்ளலாம். வருமான வரி சட்டம் 1961 பிரிவு 80சி-யின் கீழ் வருமான வரிவிலக்கு பெற தகுதியானது.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்திய தபால் துறையின் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் காப்பீட்டு தொகை அதிகபட்சமாக ரூ.20 லட்சமாக இருந்து வந்தது. தற்போது இந்த காப்பீட்டுத்தொகை ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது அனைத்து தபால் நிலையங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment