Tuesday 3 February 2015

படங்கள்- சிலைகள் ஆகியவற்றை பொது அலுவலகங்களிலிருந்து நீக்குதல்.



:37
: அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து கடவுள் படங்களையும், சிலைகளையும் உடனே அகற்றுமாறு, தி.மு.க., அரசு பதவி ஏற்ற உடனேயே, 1968ல் பிறப்பித்த ரகசிய உத்தரவு தற்போது அம்பலமாகி உள்ளது. 

அப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலர் சி.ஏ.ராமகிருஷ்ணன் இது தொடர்பாக, அந்தரங்க செய்தி என்ற தலைப்பில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது:

அரசு அலுவலகங்களில் கடவுள் பட நீக்கம் ஆணை,

அந்தரங்க செய்தி,

தமிழக அரசு,

பொது ( ஜெனரல்) இலாகா,

நினைவுக் குறிப்பு எண்: 7553/66-2,

நாள்: 29, ஏப்ரல், 1968,







இலாகா தலைவர்களுக்கு அறிவித்துக் கொள்ளப்படுவதாவது - மதச்சார்பற்ற ஆட்சி நாடு ஆகையால் - எந்த மதத்தைச் சார்ந்த சாமியார்கள் ( சாதுக்கள், மகான்கள், அவதாரங்கள் உட்பட) கடவுள்கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள் - சிலைகள் முதலியவற்றை அரசாங்க அலுவலகத்தில் அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைத்திருப்பது சரியல்ல என்று அரசாங்கம் கருதுகிறது.

இந்த கட்டடங்களில் இப்போது இவைகள் இருக்குமாயின் அவற்றை படிப்படியாகவும் எந்த வித ஆடம்பரமில்லாமலும் பிறர் கவனத்தை ஈர்க்காத வகையிலும் அல்லது எவ்வித அசம்பாவிதம் நிகழாத வகையிலும் அகற்ற வேண்டும்.

- சி.ஏ.ராமகிருஷ்ணன்,

அரசினர் தலைமைச் செயலாளர்

/ உண்மை நகல் /

No comments:

Post a Comment