Thursday 19 February 2015

அரசு பணம் கையாடல்: கல்வித்துறை ஊழியர்கள் 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்!


 










சென்னை:தேர்வு செலவுகளுக்காக அரசு தேர்வுத்துறை அனுப்பிய  பணத்தை கையாடல் செய்ததாக, 5 ஊழியர்களை அரசு தேர்வுத்துறை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு தேர்வுத்துறை சார்பில் ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பப்படும். இந்த பணத்தை செலவழித்து விட்டு கணக்கு காட்டி, மீதிதொகையை அரசு தேர்வுத்துறைக்கு சம்மந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த அலுவலர்கள் ஆண்டு தோறும் சமர்ப்பிக்க வேண்டும். 

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த பிளஸ் 2 உடனடித்தேர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பு தேர்வுக்கு அனுப்பப்பட்ட முன் பணத்தை கையாடல் செய்திருப்பதாக 5 கல்வித்துறை அதிகாரிகள் மீது அரசு தேர்வுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இணை இயக்குனர் கருப்பசாமிக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014ம் ஆண்டு நடந்த பிளஸ் 2 உடனடித்தேர்வு மற்றும் ஜூலை மாதம் நடந்த ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ தேர்வு செலவுகளுக்காக அரசு தேர்வுத்துறை அனுப்பிய முன் பணத்தை சரிவர சமர்ப்பிக்காமல் கையாடல் செய்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த முறைகேட்டில் ஈடுபட்ட திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் சூப்பிரடண்ட் சக்திவேல், அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவியாளர் நாகராஜ், தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த உதவியாளர் தனபால், திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலகத்தின் உதவியாளர் அகிலன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தின் உதவியாளர் லட்சுமி நாராயணன் ஆகிய 5 பேரை தற்காலிகமாக சஸ்பென்ட் செய்து அந்த உத்தரவு நகலை அரசு தேர்வுத்துறை இயக்குனர கத்திற்கு அனுப்பி வைக்கும்படி உத்தரவிடப்படுகி றது.
இவ்வாறு இயக்குனர் தேவராஜன் அதில் கூறியுள்ளார்.

- எம்.கார்த்தி.

  
 

No comments:

Post a Comment