Friday 6 February 2015

"வாகனங்களில் உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தினால் நடவடிக்கை



வாகனங்களில் ஐஎன்டி என்ற உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தினால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பளர் த. ஜெயச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஐஎன்டி என்ற உயர்பாதுகாப்பு பதிவு எண் பலகை என்ற குறியீடு கொண்ட நம்பர் பிளேட் தமிழகத்தில் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே, இக்குறியீடு கொண்ட போலி நம்பர் பிளேட்கள் வாகனங்களில் பொருத்துவது, தயாரிப்பது, விற்பனை செய்துவது சட்டப்படி குற்றமாகும். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் உயர்பாதுகாப்பு பதிவு எண் பலகை பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 171 வழக்குகள், அனுமதியின்றி உ யர்பாதுகாப்பு பதிவு எண் பலகையை விற்பனை செய்த விற்பனையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்நிலையில், திருவாரூரில் புதன்கிழமை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு உயர்பாதுகாப்பு பதிவு எண் பலகை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட காவல்துறை சார்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

No comments:

Post a Comment