Thursday 26 February 2015

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் பொது சேவை மையம் தொடக்கம்


திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொது சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தொடக்கி வைத்தார்.
இச்சேவை மையத்தின் மூலம் வருமான, இருப்பிட, விதவை, சாதி, முதல் தலைமுறை பட்டதாரி ஆகிய சான்றிதழ்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், விதவை மறுமண நிதியுதவி திட் டம், ஏழை பெண் திருமண நிதியுதவி திட்டம், கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஆகியவற்றும் விண்ணப்பிக்கலாம். மேலும் மின் கட்டணத்தையும் செலுத்தலாம்.
தவிர மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். ஆதார் அட்டை பெற ஒப்புகை சீட்டு இருந்தால் அதை பயன்படுத்தி பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட் பெற அதன் தொடர்பான காவல்துறையின் சான்று பெற விண்ணப்பிக்கலாம். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தவணைத் தொகையை செலுத்தலாம் என்றார் மதிவாணன்.

No comments:

Post a Comment