Saturday, 7 June 2014

சளி தொல்லைக்கு கற்பூரவள்ளி/ஓமவள்ளி

கற்பூரவள்ளி இலை இரண்டு அல்லது மூன்று எடுத்துகோங்க. அதை ஒரு ஜல்லடையில் வெச்சு நல்ல விரல்களால் கசக்குங்க. கசக்கி பிழிஞ்சா சாறு வரும். 6-12 மாசத்துக்குள் உள்ள குழந்தைனா 3 சொட்டு போதும். பாலில் கலந்து குடுக்கலாம். அல்லது தேனில் கலந்து குடுக்கலாம். பெரிய குழந்தைகளுக்கு 5-6 சொட்டு குடுக்கலாம். பொதுவா என் குழந்தை இந்த சாற்றை தேனில் கலந்து கொடுத்தால் குடிக்க மாட்டாள். எனவே நான் இதை குழந்தைகளுக்கு செய்யும் உப்பு பருப்பில் கலந்து சாதத்தில் பிசைந்து குடுப்பேன். அல்லது அவளுடைய காஞ்சியில் கலந்திடுவேன். தோசை மாவிற்குள் பொடியாக நறுக்கி போட்டுக்கலாம். இது பெரியவர்களுக்கும் சளி இருமலுக்கு நல்ல மருந்து. இரவில் சாபிட்டால் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் குறையும். குழந்தைக்கு பிடிக்கும் எந்த உணவிலும் சேர்த்து குடுக்கலாம். நான் சமயத்தில் முட்டை வறுவல், fried rice போன்றவற்றுள் பொடியாக நறுக்கு போட்டிடுவேன் ;) அனால் தேனில் கலந்து சாபிடுவது பெஸ்ட். அப்படி சாப்பிடத குழந்தைகளை மிரட்டி, அமுக்கி கொடுப்பதை விட இப்படி mask பண்ணி குடுத்திடுங்க. நீங்களும் சளிக்கு சாப்பிட்டு பாருங்க. இருமலுடன் கூடிய சளிக்கு கை கண்ட மருந்து இது.

Note: குழந்தைக்கு காய்ச்சலுடன் சளி இருந்தால் இந்த சாற்றை தேனில் கலந்து குடுக்க வேண்டாம். வேறு விதங்களில் குடுங்க. ஏனெனில் தேன் சூடு ஆனால் toxic ஆகிடும்னு ஆயுர்வேதத்தில் சொல்றாங்க. வெதுவெதுப்பான temperatureகு மேல் போக கூடாது. காய்ச்சல் உள்ள போது உடம்பு சூடிற்கு தேன் toxic ஆகிடும்னு சொல்றாங்க.

இதோ கற்பூரவள்ளி/ஓமவள்ளி செடி .

 
http://agritech.tnau.ac.in/horticulture/horticulture_gallery/medicinal_crops/pages/Karpoora%20valli%20%28Coleus%20aromaticus%29.html

No comments:

Post a Comment