திருவாரூரில் நடந்த பயங்கர தீ விபத்தில் 8 கூரை வீடுகள் எரிந்து சாம்பலாயின.
தீ விபத்து
குட்ஷெட் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 45). இவர் ஆட்டோ டிரைவர். அந்த பகுதியில் குடிசை வீடுகள் அதிகமாக உள்ளன. இவரும் கூரை வீட்டில் தான் வசித்து வருகிறார். நேற்று மதியம் திடீரென இவருடைய வீட்டில் தீப்பிடித்தது. இந்த தீ அருகே இருந்த மற்ற கூரை வீடுகளுக்கும் மளமள வென பரவியது. ஒரே நேரத் தில் அடுத்தடுத்து இருந்த 8 கூரை வீடுகளும் கொளுந்து விட்டு எரிந்ததால், வீடுகளில் இருந்தவர்கள் தங்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதனால் அப்பகுதியே களோபரமாக காட்சி அளித்தது.
கட்டுக்குள் வராத தீ
தீ விபத்தை அடுத்து அப் பகுதி பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன் றனர். இதுகுறித்து திருவாரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படைவீரர்கள் நிலைய அலு வலர் கார்த்திகன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டது. இதையடுத்து தீணைப்பு வீரர்கள் அருகே நடந்த சாலை பணியில் பயன்படுத்தப்பட தண்ணி லாரியை தீ விபத்து நடந்த பகுதிக்கு எடுத்து வந்து, அதில் இருந்த தண்ணீர் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் போராட்டம்
கூத்தாநல்லூரில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாக னம் வரவழைக்கப்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 8 கூரை வீடுகள் முழுமையாக எரிந்து சாம்ப லாயின. இதில் வீடுகளில் இருந்த டி.வி.க்கள், கட்டில்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகின. இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் நகரசபை தலைவர் ரவிச்சந்திரன், உதவி கலெக்டர் பரமசிவம், தாசில்தார் அம்பிகாபதி, அ.தி.மு.க. நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணி கண்டன், நகரசபை றுப்பினர் அய்யனார் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினர்.
மின்கசிவு
தீ விபத்தில் ஆட்டோ டிரை வர் தியாகராஜன், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் மணி (வயது70), டீக்கடை தொழி லாளி ராசாத்தி (35), சுமை தூக்கும் தொழிலாளர்கள் பழனி (40), அன்பழகன்(40), கோபால்(55), சமையல் தொழி லாளிகள் செல்வ ராஜ் (39), பாஸ்கரன்(42) ஆகிய 8 பேரின் கூரை வீடுகள் எரிந்து சாம்பலாயின.
கூரை வீடுகளுக்கு மேல் பகுதியில் மின்கம்பிகள் செல் வதால், மின்கசிவு காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
நிருபர் மீது தாக்குதல்
தீ விபத்து தொடர்பான செய்தியை சேகரிப்பதற்காக தனியார் டி.வி. நிருபர் ஒருவர் சம்பவ இடத்துக்குச் சென்ற போது, அவரை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தாக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை யடுத்து திருவாரூர் டவுண் போலீஸ் நிலையத்தில் தனியார் டி.வி. நிருபர் புகார் கொடுத்தார்.

No comments:
Post a Comment