Thursday 12 June 2014

தமிழக அரசுக்கு மோடி பாராட்டு

(கோப்புப் படம்/எம்.மூர்த்தி)

(கோப்புப் படம்/எம்.மூர்த்தி)
தமிழக அரசு செயல்படுத்திய மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
 
மக்களவையில் பிரதமர் மோடி புதன்கிழமை பேசியதாவது:
 
“மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும். ‘குஜராத் மாதிரி’யை விட எங்கள் மாநிலத்தின் வளர்ச்சித் திட்ட மாதிரி சிறப்பானது என்று பிற மாநிலங்கள் உரிமை கோருவதைப் போன்ற வார்த்தைகளைக் கேட்க மிகவும் ஆவலுடன் உள்ளேன்.
 
தமிழக உறுப்பினர் ஒருவர், தங்களின் மாநில அரசு செயல்படுத்தும் வளர்சித் திட்ட மாதிரி மிகவும் சிறந்தது என்று கூறினார். இதுபோன்ற போட்டி மனப்பான்மைதான், ‘குஜராத் மாதிரி’ ஏற்படுவதற்கு முக்கிய பங்களிப்பாக இருந்தது.
 
அதே சமயம், குஜராத் மாதிரியை மிகவும் வறண்ட கட்ச் பகுதியிலும், மிகவும் பசுமையான வல்சாத் பகுதியிலும் ஒரே விதமாக அமல்படுத்த முயன்றால், அது பயனளிக்காது.
 
தமிழக அரசு செயல்படுத்திய மழைநீர் சேகரிப்புத் திட்டம், மிகவும் பாராட்டுதலுக்குரியது அதனால் நல்ல பலன் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, சத்தீஸ்கர் அரசு செயல்படுத்தியுள்ள பொது விநியோகத் திட்டம், கேரள அரசின் குடும்பஸ்ரீ திட்டம், நாகாலாந்து அரசின் பழங்குடி யினர் நலன் திட்டங்களும் மிகவும் பாராட்டுக்குரியவை. மாநிலங் களின் இது போன்ற சிறப்பான திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
 
சிக்கிம் அரசு, இயற்கை முறை விவசாயத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்பையெல்லாம், எனது சகோதரி முதல்வர் மம்தா பானர்ஜி கடினமாக உழைத்து மாற்றி யுள்ளார் என்றார்.
 

No comments:

Post a Comment