Tuesday, 10 June 2014

எட்டு வயது அண்ணனின் உயிரைக் காப்பாற்ற காத்திருக்கும் ஒன்பது மாத மழலைத் தங்கை





திருவாரூரில் வசித்து வரும் கே.சிவக்குமார்-கவிதா தம்பதியரின் மகனான மாஸ்டர் சி.அருண்(8) சிவப்பணுக்கள் குறைவு நோயால் பாதிக்கப்பட் டிருக்கின்றான். அவனது உயிரைக் காப்பாற்ற ஸ்டெம் செல் மாற்று (STEMCELL TRANSPLANTATION) என்ற சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறு கின்றனர். தனது அண்ணனின் சிகிச்சைக்கு உதவ 9 மாத மழலைத்தங்கை சி.நித்ய ஸ்ரீ காத்திருக்கிறாள் என்பது வெறும் செய்தியல்ல. ஒரு குடும்பத்தின் சோகம்.

கே.சிவக்குமார் தனதுசொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் காரியாப் பட்டியிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக வந்து வசித்து வரும் ஊர் திருவாரூர். சிவக் குமார் கவிதா தம்பதியருக்கு மாஸ்டர் அருண் பிறந்த பிறகுசுமார் ஒண்ணரை வயது இருக்கும்போது மிகுந்த சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்தான். மேலும் அவனது உடல் முழுக்க மஞ்சள் நிற மாக மாறத் தொடங்கியது. அப்போது தொடங்கியதுதான் இந்த குடும்பத்திற்கான துயர மும் சோகமும். மதுரை ராசாசிஅரசு மருத்துவமனை தொடங்கி தரமணி, வேலூர், சென்னை என தங்கள் ஒரேமகனை காப்பாற்ற பெற் றோர்கள் ஒவ்வொரு மருத் துவமனையாக ஏறி இறங்கி உள்ளனர்.

மாஸ்டர் அருணின் பெற்றோர்கள், நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டதால் இந்த நோய் உண்டாகியிருக்கலாம் என னும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் எனசிவக்குமார்-கவிதா தம்பதி யினர் ஒரு முடிவுக்கு வந்தனர். மாஸ்டர் அருணுக்கு நாளுக்குநாள் உடல் நிலை மோசமாகி அபாயக் கட்டத்திற்கு செல்லும்போது தங்கள் மகனைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்பதால் சிவக்குமார் தனது சொந்த வாகன மான லாரியை விற்றுள்ளார். மேலும் தனது மனைவியின் நகைகள் உள்ளிட்ட சொத்துக்களையும் விற்று தொடர் மருத்துவம் பார்த்துள்ளார். திருமதி கவிதா சிவக்குமார் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகவும், சிவக்குமார் திருவாரூரில் ஒரு தனியார் பள்ளியில் சொற்ப ஊதியத் தில் ஓட்டுநராகவும் பணிபுரிந்தாலும் கிடைக்கும் வருமானத்தை தங்களது மகனின் உயிரைக் காப் பாற்றினால் போதும் என்றே செலவு செய்துள்ளார்கள்.

மாஸ்டர் அருணைக் காப் பாற்ற வேண்டும் என்ற ஒரே நினைவுதான் அவர்களிடம் இருந்தது. மாதா மாதம் மருந்து, மாத்திரை, ஊசி மற் றும் ஏ பாசிட்டிவ் வகை (250 மிலி) இரத்தம் ஏற்றுவது என்றே சிகிச்சை தொடர்ந்தது. தொடர் சிகிச்சையின் காரண மாக ஓரளவு உடல்நிலை முன் னேறியிருப்பதைப் போல் தோற்றத்தில் தெரிந்தாலும் அவனுடைய குறைபாடு நீங்க வில்லை. சிவப்பணுக்கள் குறைபாட்டின் காரணமாக `ஹீமோ குளோபின் 4 பாயிண்ட் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.இதனிடையே தற்போது தொடர்ந்து மருத்துவம் பார்த்து வரும் சென்னையைச் சேர்ந்த பெண் குழந்தை மருத்துவர் நீங்கள் ஏன் இன் னொரு குழந்தையை பெற்றுக்கொள்ளக்கூடாது எனசிவக்குமார் தம்பதியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இவர்களோ அடுத்தக் குழந்தையும் இதே குறை பாட்டுடன் பிறந்தால் என்ன செய்வது. மேலும் தங்கள் மகன் அருணுக்கே லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக் கிறோம். இந்த நிலையில் இன்னொரு குழந்தை தேவை யில்லை என்று தங்கள் கருத்தைதெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த மருத்துவரோ விடாப்பிடியாக இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள் ளுங்கள். அதன் மூலமாகக் கூட இவனைக் குணப்படுத்த முடியும் என தெரிவித்ததைத் தொடர்ந்து பிறந்தவள்தான் மழலை நித்ய ஸ்ரீ. தற்போது இந்த மழலைக்கு வயது 9 மாதம் ஆகிறது. இந்த மழலை கருவில் இருந்தபோதே பரிசோதனை செய்து பார்த்ததில் எவ்வித குறைபாடும் இல்லை என்பது தெரிய வந்தது. மருத் துவத்துறையில் இது அற்புதம் எனக் கூறிய மருத்துவர் இந்தக் குழந்தையிடமிருந்தே சிவப்பணுக்களை எடுத்து மாஸ்டர் அருணுக்கு செலுத்தலாம் என நம்பிக்கை தெரிவித் தார்.பெற்றோர்களின் தொடர் கவனிப்பின் காரணமாகவும், லட்சக்கணக்கில் செலவு செய்த காரணத்தினாலும் எட்டு வயதை எட்டியுள்ள மாஸ்டர் சி.அருண் தற்போது நான்காம் வகுப்பிற்கு செல்கிறான். ஒரு பக்கம் வைத்தியம், மறு பக்கம் படிப்பு என தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறான். சிறுவன் என்பதால் தனக்குள் என்ன நடக்கிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட உள் ளான் மாஸ்டர் அருண். இதற்காக இவனது பெற்றோர்கள் தற்போது சென்னையில் தங்கியுள்ளனர். மாஸ்டர் அருணுக்கு வந்துள்ள நோய்க்கு அறுவைசிகிச்சை செய்ய தமிழக அரசின் மருத்துவக்காப்பீட்டு வசதியில் லை. இதனை அரசு நிறுத்திவைத்துள்ளது என மருத்துவர் கள் தெரிவித்துள்ளனர். இது கொடுமையிலும் கொடுமை. தமிழக அரசின் இந்த நடவடிக் கை உண்மை என்றால் அரசு மறுபரிசீலனை செய்து இது போன்ற நோயாளிகளுக்கு மருத்துவக்காப்பீட்டு வசதி செய்து தரவேண்டும்.தனது எட்டு வயது அண்ணனுக்கு தாம் உதவப் போகிறோம் என்பது குறித்துஎதுவும் அறியாத ஒன்பது மாதமழலைச் சகோதரி சி.நித்யஸ்ரீ தனது உடலை மருத்துவப் பரி சோதனைக்கு உட்படுத்த காத் திருக்கிறாள்.
இந்த மழலையின் ரத்தத்திலிருந்தோ அல்லது வளர்ந்தும், வளராத எலும்பு மஜ்ஜையிலிருந்தோ சிவப்பணுக்களை பிரித்து எடுத்து அறுவை சிகிச்சை மூலம் மாஸ்டர் அருணுக்கு செலுத்த வேண்டும். மேலும் தொடர் சிகிச்சையும் அளிக்க வேண்டும். இந்த சிகிச்சைக் காக பத்து லட்சம் ரூபாய் வரை செலவாக இருக்கிறது. தாங்க முடியாத துயரத்திலும் சோகத்திலும் தவிக்கிறார்கள் பெற்றோர்கள். தாய் அரசு ஊழியர் என்பதால் அவருக்கான மருத்துவக் காப்பீட்டுத்தொகை கிடைக்கும் என்றாலும் மேலும் செலவாகக் கூடிய லட்சக்கணக்கான ரூபாய்க்கு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்கள் பெற்றோர்கள்.

சென்னை போன்ற பெரு நகரத்தில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தங்களையும் தங்கள் குழந்தைகளையும் காப்பாற்றுவது என்பதை எப்படி தாங்க முடியும் இவர்களால். யாராவது உதவிட மாட்டார்களா என்ற மனவேதனையோடும் அன் றாட அழுகையோடும் காத் திருக்கின்றனர் கே.சிவக்குமார் தம்பதியினர்.

எஸ்.நவமணி
தீக்கதிர் நிருபர்
 பத்திரிக்கையாளர்கள்  சங்க மாவட்ட தலைவர் .

பின் குறிப்பு : இந்த செய்தி கடந்த 3/6/2014 அன்றைய தீக்கதிர் நாளிதழில் வந்தது
                            பின்னர் தமிழகஅரசு மருத்துவ செலவுதொகையைஏற்று ஆணையிட்டுள்ளது .மீதி செலவு தொகையை நல் உள்ளம்படைத்தவர்கள் முன்வந்து உதவி
செய்ய முன்வர வேண்டும் . இறைவன் அருளால் முழு உடல் நலனையும் வாழ்வையும் பெற பிராத்திப்போம் ..

No comments:

Post a Comment