Friday, 20 June 2014

கல்வி உதவித்தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்






திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின் மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களில் 1 முதல் எஸ்எஸ்எல்சி வரை படிக்கும் கிறிஸ்துவர், இஸ்ஸாமிய, பௌத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் குடும்ப ஆண்டு வருமானம்
ரூ. 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு இறுதித் தேர்வில் (9-ம் வகுப்பு நீங்கலாக) 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள் நலவாரியங்கள் மூலம் 2014-2015-ம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை எதுவும் பெற்றிருத்தல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் ஒருவருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவ, மாணவிகளுக்கு முன்னுரி மை வழங்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்
www.momascholorship.gov.in

என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆக.1-ம் தேதிக்குள் பெற்று கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஆக. 15-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment