திருவாரூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு 100 இடங்களுடன் தொடங்கப்பட்ட
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சி, சேலம் கல்லூரி யில் கூடுதலாக அனுமதி
வழங்கப்பட்ட 75 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அரசு
மருத்துவக் கல்லூரிகளில் 175 எம்பிபிஎஸ் இடங்கள் குறைந்துள்ளன.
தமிழகத்தில் கடந்த 2013-2014 கல்வி ஆண்டில் 19 அரசு மருத்துவக்
கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன. இவற்றில் அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக, மீதமுள்ள 2,172 இடங்கள் மாநில அரசுக்கு
இருந்தன. இந்த 2,172 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கவுன்சலிங் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டை
போலவே 2014-2015ம் கல்வி ஆண்டிலும் 2,172 இடங்களுக்கு கவுன்சலிங் நடத்தப்பட்டு
மாணவர் சேர்க்கை நடை பெறும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் (டிஎம்இ)
தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக அனுமதி வழங்கிய மருத்துவக் கல்லூரி
மற்றும் இடங்கள் அதிகரிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக்
கவுன்சில் (எம்சிஐ) குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது திருவாரூரில் சில
ஆண்டுகளுக்கு முன்பு 100 இடங்களுடன் தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியில்
போதிய பேராசிரியர்கள், பரிசோதனைக் கூடங்கள், உள்கட்டமைப்பு உள்ளிட்டவை இல்லை என்பது
கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த கல்வி ஆண்டில் அங்கு மாணவர் சேர்க்கையை
எம்சிஐ நிறுத்தி வைத்துள்ளது.
அதே போல கடந்த கல்வி ஆண்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில்
கூடுதலாக 50 எம்பி பிஎஸ் இடங்கள் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுத
லாக 25 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. ஆனால் இந்த இரண்டு கல்லூரி
களில் போதுமான வசதிகள் இல்லாததால், இந்த கல்வி ஆண்டில் 75 எம்பிபிஎஸ் இடங் களில்
மாணவர் சேர்க்கை நடத்துவ தற்கான அனுமதியை எம்சிஐ நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 18-ஆக
குறைந்துள்ளது. இந்த 18 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசுக்கு 2,023
எம்பிபிஎஸ் இடங் களே உள்ளன. எம்சிஐ அனு மதி வழங்காததால். கடந்த ஆண்டை விட இந்த
ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 175 எம்பிபிஎஸ் இடங் கள் குறைந்துள்ளன.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதிதாக அனுமதி வழங்கப்பட்ட கல்லூரிகளில் ஆண்டுக்கு ஒரு முறை வீதம்,
5 ஆண்டுகளுக்கு எம்சிஐ குழுவினர் ஆய்வு செய்வார் கள். மாணவர் சேர்க்கை நிறுத்தி
வைக்கப்பட்ட பிறகு மீண்டும் எம்சிஐ குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். இரண்டாம்கட்ட
கவுன்சலிங் தொடக் கத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்
சேர்ப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும்.
அதே போல திருச்சி அரசு மருத்து வக் கல்லூரியில் 50 கூடுதல் இடங் கள்
மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 25 கூடுதல் இடங்களின் மாணவர்
சேர்க்கைக்கும் அனுமதி கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தனியார் கல்லூரிகளுக்கும் அனுமதி மறுப்பு
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12 தனியார் (சுயநிதி) மருத்துவக்
கல்லூரிகளில் இருந்து மாநில அரசு ஒதுக்கீட்டாக சுமார் 900 இடங்கள் கிடைத்தன. ஆனால்
இந்த கல்வி ஆண்டில் 5 தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனு
மதியை எம்சிஐ நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில
அரசு ஒதுக்கீட்டாக 498 இடங்கள் மட்டுமே உள்ளன. மேலும் மத்திய அரசின் கல்வி
நிறுவனமான இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கும் அனுமதி கிடைக்கவில்லை.
No comments:
Post a Comment