16வது நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் முடிந்து புதிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நரேந்திர தாமோதர் தாஸ் மோடி தலைமையில் அமைக்கப்பட்டது .
இதில் 545 புதிய உறுப்பினர்கள் கொண்டு அமைக்கப்பட்ட இந்த 16வது மக்களவை பல அம்சகளை கொண்டது .
மொத்த உறுப்பினர்கள் 543 + 2 நியமனம்
தேர்தல் நடந்தது 543
தேர்தல் 9 கட்டகளாக 2014 ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே 12 ம் தேதி முடிந்தது .
இதில் சுமார் 81 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி இருந்தும் சுமார் 62% வாக்காளர்கள் வாக்களித்தார்கள் .
மே 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன .
இதில் 539 இடங்களுக்கு உள்ள கட்சிகளின் விபரம் வருமாறு
வடோதரா ,பீட் ஆகிய பாஜக வென்ற தொகுதிகள் ,மேடக் டி ஆர் எஸ் வும் ,மைன்புரி சமாஜ்வாடி கட்சியும் வென்ற தொகுதிகள் போக 539 எம் பி கள் ஜூன் 4ம் மற்றும் 5ம் தேதிகளில் கூடும் புதிய மக்களவையின் முதல் கூட்டத்தில் பொறுப்பு ஏற்பார்கள் .
மொத்தம் 33 கட்சிகள் இடம் பெற்று உள்ளன .
No comments:
Post a Comment