திருவாரூர் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை பிகார் மாநிலத்திலிருந்து வந்து சேர்ந்தன.
வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இறக்கப்படுவதைப் பார்வையிட்ட ஆட்சியர் எம். மதிவாணன் பிறகு நடைபெற்ற அனைத்துக் கட்சியினர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் 270, மன்னார்குடியில் 277, திருவாரூர் தொகுதியில் 301, நன்னிலம் தொகுதியில் 304 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 2016 சட்டப் பேரவை தேர்தல் வாக்குபதிவுக்காக பிகார் மாநிலத்திலிருந்து 1,493 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2 ஆயிரம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் தேர்தல் கமிஷனின் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் வாக்காளர் குறித்த அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இக்கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் வாக்காளர் அடையாள அட்டையின் குறியீட்டு எண்ணை தட்டச்சு செய்து 1950 என்ற எண்ணிற்கு அனுப்பும் போது வாக்காளர்களின் தொகுதி, ஓட்டுச்சாவடி எண், பாகம் எண், வரிசை எண், பெயர் மற்றும் முகவரி குறித்த தகவல்கள் முழுமையாக கிடைக்கும். வாக்காளர் பட்டியல் குறித்த தகவல்களை வலைதளத்திலும் காணலாம். இதே வலைதளத்தில் வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்தத்திற்காகவும் விண்ணப்பிக்கலாம் என்றார் மதிவாணன்.
#TNelections2016 #AC168Thiruvarur
No comments:
Post a Comment