Sunday 7 February 2016

ரூ.20 ஆயிரம் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


ST
















திருவாரூர் நகரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

புகார்

திருவாரூர் நகரில் காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன் பேரில் மாவட்ட கலெக்டர் மதிவாணன் உத்தரவின்படி மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ் தலைமையில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு, அலுவலர்கள் பாலுசாமி, மணவழகன், ரெங்கராஜன், குருசாமி, விஜயகுமார், லோகநாதன், எழில்சகாயராஜா ஆகியோர் திருவாரூர் நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது காலாவதியான பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதி குறித்து ஆய்வு செய்தனர். அதில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாதிப்பு

காலாவதியான உணவு பொருட்கள் மற்றம் குளிர்பானங்கள் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அதற்கு உரிய தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் வாங்கும் பொருட்களின் தயாரிப்பு, உபயோகப்படுத்தும் காலங்கள் குறித்த விவரங்களை அவசியம் பார்க்க வேண்டும். தற்போது நடந்த ஆய்வில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உரிய முறையில் அழிக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment