Monday, 1 February 2016

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் அருகேயுள்ள அடியக்கமங்கலம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தத்துக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு செய்தார்.
அப்போது ஆட்சியர் கூறியது:
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 1.1.2016 தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்து, இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தனர்.
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் விண்ணப்பங்கள் மாவட்டம் முழுவதும் 652 நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. வாக்குச்சாவடி மையங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. வாக்காளர் பட்டியல்களை www.elections.tn.gov.in என்ற வலைதளத்தில் காணலாம் என்றார் மதிவாணன்.
ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment