Sunday 9 March 2014

Kodikkalpalayam Girls School - மத்லபுல் கைராத் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

 
          நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் சார்பாக கடந்த 10 ஆண்டுகளாக செயல் பட்டு வரும் மத்லபுல் கைராத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மிகவும் சீரான முறையில் பர்மா தெரு செல்லும் வழியில் பள்ளிவாசல் எதிர் புறம் அமைக்க பெற்றது .

 
            தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வாழ் நமதூர்
 அமைப்பான KEIA முலம் BLOCK என அழகான கட்டிடங்கள்,விளையாட்டு சாதனங்கள் ,மார்க்கக்கல்வி ,மழலைக்கல்வி பயன்பெற நமதூர் கத்தார் வாசிகள் குழு சார்பாக LCD  டி வி ,பொறுப்பான நிர்வாகம்  ,ஆர்வம் மிக்க ஆசிரியைகள் ,ஒழுக்க நெறியுடனும் கண்ணியத்துடன் உள்ள மாணவ செல்வங்கள் என பல்வேறு சிறப்புடன் இயக்கி வருகிறது இப்பள்ளி .

ஆனாலும் ஒரு குறையாக 6ம் வகுப்பு முதல் பெண்கள் மேல்ப்படிப்பு இல்லாமல் இருந்தால் நமதூர் மற்றும் சுற்று வட்டார சமுதாய மக்கள் பெரிதும் பாதிக்கபட்டார்கள் .இதை கருத்தில் கொண்டு மத்லபுல் கைராத் அறக்கட்டளை முலமாக பெண்கள் உயிர்நிலைப்பள்ளி புதியதாக துவக்குவது என ஜமாஅத் மகாஜன சபையில் தீர்மானிக்கப்பட்டது .இப்பள்ளியை நகராட்சி துவக்கப்பள்ளி அருகே வழியாக பைக்காரா திடலில் அமைக்க முடிவு செய்யப்பட்டு நன்கொடையாளர்கள் முலமாக பள்ளி வளாகம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்றது .ஆனால் பள்ளி வளாகம் அமைக்க சாலை ,மனை மேல செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பிகள் ,ஊருக்கு உள்ளே இருக்கும் பள்ளி என பல்வேறு நிலையில் ஆராயப்பட்டு பணிகள் தாமதம் ஆனது .

இதனால் உயர்நிலைப்பள்ளி கட்டஜமாஅத் மகாஜன சபை கூட்டம் கடந்த 9/2/2014 அன்று கூடி புதிய பள்ளி வளாகம் திருவாரூர் வட்டம் கீழாகவதுகுடி ஊராட்சிக்கு உள்ளப்பட்ட சேந்தமங்கலம் மயிலாடுதுறை சாலையில் நமது ஹாஜி தி .இப்ராம்ஷா ராவுத்தர் தர்ம எஸ்டேட் க்கு சொந்ததமான நிலத்தில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது .

 
தினா அப்பா வின் உயில் படி பெண்கள் கல்விக்கு தனது நிலத்தில் அமைக்க வேண்டும் என்ற சொல்லுக்கு முன் வடிவம் அளிக்கப்பட்டது .அல்ஹம்துரில்லஹ்


 
 இன்ஷா அல்லாஹ் வரும் 2014-2015 கல்வி ஆண்டில் 8ம் வகுப்பு மாணவிகள் புதிய பள்ளி வளாகத்தில் படிக்கும் வகையில் மிக விரைவாக பணிகள் நடைபெற்று வருகிறது.
ம்           



 
வீடியோ 
ம்ம்

மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலை

திருவாரூர்

No comments:

Post a Comment