Sunday, 2 March 2014

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை

கல்வி, வேலைவாய்ப்பில்
இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை, மார்ச்.2-

கல்வி, வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த கோரிக்கைகளை பரிசீலித்து பரிந்துரை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

கோரிக்கை மனு

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் முதன்மைச்செயலாளர் கே.அருள்மொழி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில், கல்வி, அரசு வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





 
விரைவில் பரிந்துரை

அந்தக் கோரிக்கை அடங்கிய மனுக்களை தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். அதுகுறித்து ஆய்வு செய்து, தகுந்த பரிந்துரையை அரசுக்கு விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின் குறிப்பு

தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்களவை தேர்தலில் நிலைப்பாட்டை தெளிவடைய செய்யலாம்
.ஆனால் அடுத்து வரும் 2016 சட்டமன்ற தேர்தல் வரை நீண்டு கொண்டே போகலாம் . மேலும்  அரசின் அறிவிப்பால் சமுதாய இயக்கங்கள் என்ன செய்வது தெரியாமல் உள்ளன .ஒரு சிலர் மட்டுமே காரணம் இல்லை இன்னும் பிற அமைப்புகளும் இருக்கிறது என்பதை உணர வேண்டும் .








No comments:

Post a Comment