Tuesday, 25 March 2014

"நோட்டா'வுக்கு தனிச் சின்னம் அறிவிப்பு

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை (NOTA) வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே பதிவு செய்வதற்கான தனிச் சின்னத்தை தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது.

அதன்படி, கருப்பு நிறத்திலான செவ்வக வடிவ வட்டத்துக்குள் நோட்டா என்பது ஆங்கிலத்தில் வெள்ளை நிற எழுத்துகளால் அச்சிடப்பட்டிருக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து,அவர் வெளியிட்ட அறிவிப்பு: யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற முடிவை வாக்காளர்கள் எடுக்கும் போது, அதனை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் ரகசியம் காக்கப்படும் வகையில், வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே அதற்கான வசதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 
அதன்படி, வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் அடங்கிய பட்டியல் சீட்டில் "நோட்டா'வுக்கென தனிச் சின்னமும் இடம்பெறும். இந்த சின்னத்துக்கான வடிவமைப்பை தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது. அதன்படி, கருப்பு நிறத்திலான செவ்வக வடிவ வட்டத்துக்குள் (4 விளிம்புகளும் வட்டமாக்கப்பட்டு இருக்கும்) நோட்டா (NOTA )என்பது ஆங்கிலத்தில் வெள்ளை நிற எழுத்துகளால் எழுதப்பட்டும், தமிழ் மொழியில், மேற்காணும் நபர்கள் எவருமில்லை என்றும் அச்சிடப்பட்டிருக்கும்.

தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வேட்பாளர் பட்டியல் சீட்டு, வெள்ளை நிறத்தில் இருப்பதால், நோட்டா என்ற எழுத்து ஆங்கிலத்தில் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். சட்டப் பேரவைத் தேர்தல்கள் என்றால் வேட்பாளர் பட்டியல் சீட்டு, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதனால், நோட்டா என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
எப்படி எழுதப்பட்டிருக்கும்? வேட்பாளர் பட்டியல் சீட்டில், நோட்டா என்பது முதலில் தமிழ் மொழியில், மேற்காணும் நபர்களில் எவருமில்லை என்று எழுதப்பட்டிருக்கும். இந்த வார்த்தையை ஒட்டியபடியே தொடர்ச்சியாக நோட்டாவுக்கான சின்னம் இடம்பெறும்.

 
வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டக்கூடிய வாக்காளர் பட்டியல் சீட்டில், தேர்தலில் போட்டியிடும் வாக்காளரின் பெயர் மற்றும் அவரது சின்னத்துக்கு இடையே ஒரு இடைவெளி விடப்பட்டிருக்கும்.

நோட்டாவில் அந்த இடைவெளி இருக்காது. இதனால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களுக்குக் கீழே, இடம்பெறக் கூடிய நோட்டா வாய்ப்பில் வெறும் காலியிடம் மட்டுமே விடப்பட்டிருக்கும். வேட்பாளர்களின் சின்னங்களுக்கு இணையாக நோட்டா சின்னம் இடம்பெறாது என்று பிரவீண்குமார் தனது அறிவிப்பில்
தெரிவித்துள்ளார்.


 உங்கள் ஓட்டு பதிவை வரலாற்று பதிவாக மாற்றுங்கள்

ஜனநாயக உரிமையை கண்டு ஏமாற்றும் அரசியல் வாதிகள் பயப்படவேண்டும் .

உண்மையான மக்களாட்சி மலர வேண்டும்


 

No comments:

Post a Comment