Wednesday, 5 March 2014

திருவாரூர் மின் தடை நேரம் அறிவிப்பு

திருவாரூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கான மின்தடை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


திருவாரூர் புதுத்தெரு, தென்றல் நகர், எஸ்.வி.எஸ். நகர், கொடிக்கால்பாளையம், தெற்குவீதி, சேந்தமங்கலம், கிடாரங்கொண்டான், பிடாரிகோயில் பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும்,

துர்காலயா சாலை, மேலகளத்துக்காடு, மடப்புரம், முதலியார் தெரு, பழைய தஞ்சை சாலை, விஜயபுரம், புறவழிச்சாலை, காந்தி சாலை, விளமல், பவித்திரமாணிக்கம் ஆகியப் பகுதிகளில் காலை 6 முதல் 10 மணி வரையிலும்,

 அடியக்கமங்கலம் மின் இணைப்பு பகுதியில், அலிவலம், அந்தங்குடி, ஈ.பி.காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும்,

 மாவூர், மாங்குடி, கூடூர், பாலையூர், கமலாபுரம், வடகரை, அம்மையப்பன், முகந்தனூர் உள்ளிட்டப் பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரையிலும்

மார்ச் மாதத்தில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment