Friday, 28 March 2014

நாகை தொகுதியில் 296 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி நடராசன் அவர்கள் இன்று 28/03/2014 அளித்த பேட்டி .ஊடக மையம் 
நாகை நாடாளுமன்றத் தொகுதியில் 296 வாக்குச் சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்றார் ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சி. நடராசன்.

திருவாரூரில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாகை நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் சனிக்கிழமை (மார்ச்.29) தொடங்குகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முற்பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்யலாம். மார்ச்.30,31 விடுப்பு நாள்களாகும். தொடர்ந்து ஏப்.5-ம் தேதி வரை மேற்குறிப்பிட்டுள்ள நேரத்தில் மனுக்கள் பெறப்படும். மனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் (என்னிடம்) அல்லது இதே ஆட்சியர் அலுவலகத்தில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (மாவட்ட வழங்கல் அலுவலர்)மனுத் தாக்கல் செய்யலாம்.


மார்ச்.7-ம் தேதி பெறப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மார் ச்.9-ம் தேதி மாலை 3 மணி வரை மனுவைத் திரும்பப்பெறலாம். அன்றைய தினம் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும். ஏப்.24-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேட்பாளர் அல்லது முன்மொழிபவர்களில் ஒருவர் நேரில் வந்து மேற்குறிப்பிட்ட இடங்களில் தாக்கல் செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களுடன் 4 பேர் வரலாம். சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் 10 பேருடன் வரவேண்டும். வேட்பு மனுவுடன் உறுதிமொழிப்பத்திரம் (படிவம் 26) ரூ. 20 மதிப்புள்ள முத்திரைத்தாளில் தயார் செய்து தாக்கல் செய்ய வேண்டும்.


பதட்டமான வாக்குச்சாவடி:

நாகை நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தமுள்ள 1,425 வாக்குச் சாவடி மையங்களில் 296 மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இம்மையங்களில் மத்திய துணை ராணுவம், நுண்ணின பார்வையாளர், விடியோகிராபர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தவிர வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு அஜய்குமார், நாகப்பட்டினம், கீவளூர், வேதாரண்யம் தொகுதிக்கு ருச்சீர்மெட்டல் ஆகியோர் சனிக்கிழமை முதல் தேர்தல் செலவின பார்வையாளர்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

தேர்தல் தொடர்பான புகார்களை 18004257035 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தவிர 94876226601 எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்றார் நடராசன்.

பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன் உடனிருந்தார்.



No comments:

Post a Comment