Monday, 4 July 2016

விடைபெறும் ரமலான்.

ரம்மிய ரமழானே நீ  விடை பெறுகின்றாயா....

எங்களை விட்டும் நீ செல்கின்றாயா......

உன்னை வழியனுப்பும் தருவாயில் உள்ளோம் ரமழானே..........

மனம் மறுக்கிறது ரமழானே......

கண்கள் கண்ணீர் வடிக்கிறது ரமழானே.......

இதயம் பிடைகிறது ரமழானே.......

உன்னை வழியனுப்ப.....

மனமில்லை ரமழானே உன்னை வழியனுப்ப.....

அனைவருக்கும் வசந்தமாய் அல்லவா நீ வந்தாய்......

சிறப்பு மிக்க விருந்தாளியாய் அல்லவா நீ வந்தாய்........

எத்தனை எத்தனை மகிழ்ச்சியை நீ தந்தாய் தெரியுமா........

எவ்வளவு ஒற்றுமையை நீ  தந்தாய் தெரியுமா.......

உன் வரவால் ஒரு தாய் பெற்ற மக்களை போன்று நாங்கள் ஆனோம் ரமழானே......

உன் வரவால் மஸ்ஜிதுகளெல்லாம் அலங்கரிக்கப்பட்டது ரமழானே.....

உன் வரவால் மஸ்ஜிதுகளெல்லாம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது ரமழானே.....

உன் வரவால் ஏழை எளிய மக்கள் ஆனந்தத்தால் மகிழ்ச்சியினால் கண்ணீர் வடித்தார்கள் ரமழானே.....

உன் வரவால் இந்த சமுதாயம் எத்தனை எத்தனை கோடிகளை செலவழித்தார்கள் என்று உனக்கு தெரியுமா ரமழானே......

புண்ணிய மிக்க ரமழானே......

யாராவது பசித்திருப்பதை விரும்புவார்களா......

உன் வரவால் நாங்கள் பசித்திருந்தோம் ரமழானே.......

புனித ரமழானே.....

உண்ணுவதற்க்கு உணவு இல்லாத்தினால் கிடையாது ரமழானே........

குடிப்பதற்க்கு தண்ணீரோ பானியங்களோ இல்லாமலிருந்ததினால் கிடையாது ரமழானே....

உன்னை கண்ணியப்படுத்த வேண்டும்.....

உன்னை சங்கை செய்ய வேண்டும்......

என்ற ஒரே காரணத்தினால் ரமழானே......

கை விட்டு விடாதே ரமழானே...

கை விட்டு விடாதே
ரமழானே.....

ஒரு போதும் இந்த பாவிகளை கை விட்டு விடாதே ரமழானே......

உன்னை கண்ணியப்படுத்துவதில் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் .........

மன்னித்து விடு ரமழானே......

மன்னித்து விடு
ரமழானே......

நாளை மறுமையில்
மஹ்ஷர் பெருவழியில்
பயந்து நடுங்கி நிற்க்கும் வேளையில்.......

இந்த பாவிகளான எங்களுக்கு......

பரிந்துரை செய்
ரமழானே......

பரிந்துரை செய்
ரமழானே........

😭😭😭😭😭😭😭
  ஒன்று மட்டும்
எங்களுக்கு தெரியும் ரமழானே........

அடுத்த வருடம் நிச்சயமாக நீ வருவாய்.......

உன்னை வரவேற்க்க நாங்கள் இருப்போமா ரமழானே......

காரணம்.......

சென்ற வருடம் நீ வந்தபோது எங்களுடன் இருந்து உன்னை வரவேற்ற.....

நாங்கள் உயிராய் நேசித்த பலரையும் இன்று இழந்து தவிக்கின்றோம் ரமழானே........

அந்த மண்ணறை வாழ் மக்களுக்கும் பரிந்துரை செய் ரமழானே.......
😭😭😭😭😭😭😭

ரம்மிய ரமழானே
நீ விடை பெறுகின்றாயா.....
😭😭😭😭😭😭

அஸ்ஸலாமு அலைக்க யா ஷஹ்ர ரமழான்.....

அஸ்ஸலாமு அலைக்க யா ஷஹ்ரல் முபாரக்..........
🕋🕋🕋🕋🕋🕋🕋

உன்னை பிரிய மனமில்லாமல்.....

அடங்கா கண்ணீருடன்.....

No comments:

Post a Comment