Saturday, 16 July 2016

திருவாரூர் :எஸ்எஸ்எல்சி படித்த பள்ளியில் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்


எஸ்எஸ்எல்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்எஸ்எல்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 18-ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மாணவாóகள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைபேசி எண், மின்னஞ்சல் முகவாõ ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தாங்கள் பயின்ற பள்ளிக்கு எடுத்து சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
ஜூலை 18 முதல் ஆக.1-ஆம் தேதி வரை படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலமாக பதிவு செய்து அதற்கான வேலைவாய்ப்பு அடையாள அட்டையை பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லத்தேவையில்லை.
ஜூலை 18 முதல் 15 நாள்களுக்கு நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண் வழங்கும் ஜூலை 18-ஆம் தேதி பதிவு மூப்புத் தேதியாக வழங்கப்படும். எனவே மாணவாóகள் எவ்வித பதற்றமின்றி, பொறுமையாக பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment