Tuesday, 12 July 2016

கொள்ளையடிக்க திட்டமிட்ட 3 பேர் கைது

திருவாரூரில் கூட்டாக கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் ஞாயி ற்றுக்கிழமை கிடாரங்கொண்டான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாரியம்மன் கோவில் தெரு வளைவு அருகில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது அனைவரும் தப்பிக்க முயன்ற நிலையில் போலீஸார் 3 பேரை பிடித்தனர். 2 பேர் தப்பியோடினர்.
 விசாரணையில் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி செட்டி தெருவைச் சேர்ந்த ஜான் ரவீந்திரன் மகன் அருள்மணி (19), நாகை கட்டியார் தெரு சீனுவாசன் மகன் மஞ்சுநாதன் (20), பழுர் சேவியர் மகன் வினோத் ஆரோக்கியராஜ் என்பதும், பல இடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்து தெரியவந்துள்ளது.
 இதையடுத்து போலீஸார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து உருட்டு கட்டை, மிளகாய்த்தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து அருள்மணி, மஞ்சுநாதன், ஆரோக்கியராஜை கைது செய்து தப்பியோடிய தமிழரசன், ஹாரிஸ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment