உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மூன்றாண்டு டி.எம்., எம்.சிஎச். ஆகிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு தமிழகத்தில் 189 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு சென்னையில் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு அட்டவணை, தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), சென்னை ஓமந்தூர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறும்.
காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, 4 பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை, ஜூலை 22-ஆம் தேதி முதல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment