திருவாரூர் மாவட்டத்தைச்
சேர்ந்தவர்கள் புதிய தொழில் முனை வோராக வரவிரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என
தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில்
முனைவோராக உருவாக்க தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள்
மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்து 2012-ம் ஆண்டு முதல்
செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் இளங்கலை, முதநிலை பட்டயப்படிப்பு,
பட்டயப்படிப்பு (டிப்ளமோ), ஐடிஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள்
மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி கல்வித்தகுதி பெற்றிருப்பவர் தேர்வு செய்து
ஒரு மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி
செய்யப்படுகிறது.
பிறகு வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கும் முதல் தலைமுறை தொழில்
முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத (அதிகபட்சமாக ரூ. 25
லட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் தலைமுறை தொழில்
முனைவோராக இருப்பதுடன் ஐடிஐ, பட்டயப் படிப்பு (டிப்ளமோ) இளங்கலை பட்டம்
அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 21-லிருந்து
35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர்,
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட
வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்
திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45. பயனாளி கடந்த மூன்று
ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப
ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ. 5
லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி
சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவைத் தொழில்
தொடங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீத
செலுத்த வேண்டும்.
ஏனையோர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம்
செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம்
கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
தகுதியுள்ள படித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
பெற்று தேர்வுக் குழு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விரும்புவோர் விளமலில் உள்ள மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தை
அணுகலாம். அல்லது www.msmeonline.tn.gov.
inneedsonline என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து
பயன்பெறலாம்.
No comments:
Post a Comment