திருவாரூரில் தாங்கள் வருவதற்கு முன்பே நகராட்சி
கூட்டம் முடிவுற்றதற்கு திமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் புதன்கிழமை
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்க
திமுக உறுப்பினர்கள் காலை வந்தனர். அப்போது கூட்டம் நடக்கும் அரங்கம்
பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டதற்கு கூட்டம் முடிந்து விட்டதாக
தெரிவித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கூட்ட
அரங்கில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள்,
திமுக தலைவர் மு. கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி
பெற்றமைக்காக நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நகராட்சி கூட்டத் தில்
நிறைவேற்ற வேண்டும் என்று தாங்கள் கடந்த கூட்டத்தில் கோரிக்கை விடுத்தோம்.
அதற்கு அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றலாம் என்று நகராட்சித் தலைவர்
ரவிச்சந்திரன் தெரிவித்தார் என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment