திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் படிக்கும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வங்கிக் கணக்கு எண், ஆதார் எண்ணுடன் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment