திருவாரூர் மாவட்ட தொடக்கக்கல்வி துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 3–ந் தொடங்குகிறது.
கலந்தாய்வு
திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சரோஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:–
திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி துறை சார்பில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நடப்பு ஆண்டுக்கான பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 3–ந்தேதி தொடங்குகிறது.
அதன்படி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் வருகிற 3–ந் தேதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு (இணையதளம் மூலம்), 4–ந் தேதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு (இணையதளம் மூலம்) நடைபெறுகிறது. 6–ந் தேதி விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்துக்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) நடைபெறுகிறது.
பொது மாறுதல்
7–ந் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, 13–ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, 14–ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்), இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம்). 20–ந் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் மூலம், 21–ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் மூலம் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment