மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் (எல்பிஜி) விலை வெள்ளிக்கிழமை ரூ.11 குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு
உருளைகள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதன்பிறகு வழங்கப்படும் சமையல்
எரிவாயு உருளைகள், சந்தை விலையில் அளிக்கப்படுகின்றன. இந்த மானியமில்லா
சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை ரூ.11
குறைத்துள்ளன.
இந்த விலை குறைப்பின்படி, தில்லியில் 14 கிலோ எடை கொண்ட
மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது ரூ. 537.50-ஆக விற்பனை
செய்யப்படுகிறது.
அதேசமயம், விமான எரிபொருளின் விலையை எண்ணெய்
நிறுவனங்கள் 5.47 சதவீதம் வெள்ளிக்கிழமை உயர்த்தியுள்ளன. இதன்படி,
தில்லியில் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு ரூ. 2,557 அதிகரித்து,
ரூ.49,287-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்த விலை குறைப்பு, உயர்வு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
முன்னதாக, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 89 பைசாவும்,
டீசலின் விலையை லிட்டருக்கு 49 பைசாவும் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன
என்பது குறிப்பிடத்தக்
No comments:
Post a Comment