Tuesday, 19 July 2016

மாவட்டம் முழுவதும் பல்வேறு பணிகள் பாதிப்பு


திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை மின்விநியோகம் இல்லாததால் அரசு அலுவல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு பொது மக்களும் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டன. இத்துடன் அரசு அலுவல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மின்தடையால் ஏடிஎம் மையங்கள் இயங்காததால் பணம் எடுக்க முடியாமல் வங்கி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் எந்தப் பணிகளும் செய்ய முடியாமல் பாதித்தனர்.
மின்விநியோக தடை குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மின்வாரிய அலுவலகம் பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் தகவல் தெரியப்படுத்தியிருந்தால் மக்கள் முன்னெச்சரிக்கையாக சில செயல்கள் செய்திருக்க முடியும். மின்தடை குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது பராமரிப்புப்பணி இருப்பதால் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று கூறினர். இருப்பினும் இரவு 8.30 மணி வரை மின்விநியோகம் இல்லை.
பகல் நேரத்தில் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்றாலும் இரவு நேரத்தில் மின்விநியோகம் இல்லாததால் சாலைகள், தெருக்கள் மற்றும் நகரம் முழுவதும் இருட்டில் மூழ்கியது.
இனி வரும் நாள்களில் இதுபோன்ற மின்விநியோக நிறுத்தம் இருந்தால் மின்சாரத்துறை அலுவலர்கள் முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டுமென்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment