Saturday 30 July 2016

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், இளங்கலை (ம) முதுகலை பட்டப் படிப்புகள், ஆய்வியல் நிறைஞர் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2016-17-ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் பயன்பெற w‌w‌w.‌sc‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பவர்களுக்கு ஆக.31 க்குள்ளும், இதர படிப்புகளான டிப்ளமோ, ஐடிஐ பட்டப்படிப்புகளுக்கு அக்.10-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   உதவித்தொகை பெற கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ. 2  லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆதார் எண் குறிப்பிடுவது அவசியம். 
w‌w‌w.‌sc‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n இணையதள முகவரியில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து இணைப்புகளைப் பதிவேற்றம் செய்து பதிவு செய்யப்பட்ட அவ்விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், வருவாய்த் துறையிடமிருந்து பெற்ற மதத்துக்கான சான்று மற்றும் வருமானச் சான்றிதழ் அல்லது சுயசான்று ஆகியவற்றின் நகலுடன் கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து படிக்கும் கல்வி நிலையங்களில் அக்.31-ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.  உதவித்தொகை வங்கிக்கணக்கில் செலுத்துவதால் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெளிவாக கொடுக்க வேண்டும். மாணவர்களின் விண்ணப்பங்களைத் தொடர்புடைய கல்வி நிறுவனங் கள் நன்கு பரிசீலித்து அக்.31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment