திருவாரூர் அருகே தனியார் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே கேக்கரையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்துக்குள் நகர்ப்பகுதியின் வடிகால் மற்றும் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் பிரதான பாசனவாய்க்கால் உள்ளது. கடந்த சில தினங்களாக தனியார் பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு சொந்தமான இடத்தை சுத்தம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் வடிகால் மற்றும் பாசன வாய்க்காலை தூர்த்துவிட்டதாகக் கூறி விவசாயிகள் மற்றும் அப்பகுதியினர் பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டுள்ளனர்.
அதற்கு உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தனியார் பள்ளி முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஜேசிபி இயந்திரத்தையும் சிறைபிடித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த நகர காவல் நிலைய போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி உடன் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
No comments:
Post a Comment