திருவாரூர் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 205 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சனிக்கிழமை மதியம் காரைக்காலில் இருந்த திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயிலை மறிப்பதற்காக பேருந்து நிலையத்தில் இருந்து அக்கட்சியினர் ஊர்வலமாக ரயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடைகளை நகர்த்தி ரயில் நிலையத்துக்குள் நுழைந்து ரயிலை மறிக்க முயன்றனர். இதில் போராட்டத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தினர் ரயில்வே முதல் நடைமேடையில் நின்று கொண்டு காஷ்மீர் பிரச்னை தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் ராவுத்தாஷ தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி மாவட்ட செயலர்கள் அகமதுகபீர் (தஞ்சை தெற்கு), முகம்மது மரூப் (தஞ்சை வடக்கு), செய்யது ரியாசுதீன் (நாகை தெற்கு), மாலிக் (நாகை வடக்கு), நெய்னா முகம்மது (காரைக்கால்) உள்ளிட்ட 205 பேரை போலீஸார் கைது
செய்தனர்.
No comments:
Post a Comment