Friday, 22 July 2016

வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு

திருவாரூரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருடு போனது.
திருவாரூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (38). இவர் புதன்கிழமை பனகல் சாலையிலுள்ள ஒரு வங்கியில் ரூ. 2 லட்சம் எடுத்து இருசக்கர வாகனத்திலுள்ள பையில் வைத்துக்கொண்டு கடைவீதி பகுதியில் சென்றுள்ளார்.  அப்போது ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு பணத்தை எடுக்காமல் துணிக் கடைக்குச் சென்றாராம். வெளியே வந்து பார்த்தபோது  பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கார்த்தி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment