Monday, 11 July 2016

தமிழகத்துக்கு 1,125 மெகாவாட் மின்சாரம்


கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரு உலைகளில் இருந்து தமிழகத்துக்கு 1,125 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடைய இரு அலகுகள் தற்போது இயங்கத் தொடங்கியுள்ளன. இதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் மத்திய மின் அமைச்சகத்தால் தென் மின்சார பிராந்தியத்தின் பயனாளி மாநிலங்களுக்கு மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்துக்கு 562.50 மெகாவாட், ஆந்திர பிரதேசத்துக்கு 50 மெகாவாட், கர்நாடகத்துக்கு 221 மெகாவாட், கேரளத்துக்கு 133 மெகாவாட், புதுச்சேரிக்கு 33.50 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இரு உலைகளில் இருந்து தமிழகத்துக்கு மட்டும் 1,125 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
இதேபோன்று, கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் கொள்திறனுடைய கூடுதலாக இரண்டு (அலகு 3, 4) அணு உலைகளை ரஷிய உதவியுடன் அமைப்பதற்கு மத்திய அரசு நிர்வாக அனுமதியையும், நிதி அனுமதியையும் அளித்துள்ளது. கட்டுமானப் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த உலைகளும் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழகத்துக்கு கூடுதலாக 1,125 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இருப்பினும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது அணு உலையில் இருந்து தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment