Saturday 23 July 2016

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ படிப்புகள் தொடக்கம்

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் மருத்துவக்கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகள், பட்டயப்படிப்புகள் தொடங்க கல்லூரி நிர்வாகம் கடந்த ஓராண்டாக முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து  நிகழாண்டு முதல் 9 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளைத் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டுக்கு 167 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். அறுவை அரங்க டெக்னீசியன்(20), அவசர சிகிச்சை டெக்னீசியன்(20), மயக்க மருந்து டெக்னீசியன்(20), எலும்பு முறிவு டெக்னீசியன்(6), காதொலி கருவி டெக்னீசியன்(2), மருத்துவப் பதிவேடு டெக்னீசியன்(2), டயாலிஸ் டெக்னீசியன்(2) ஆகிய 7 படிப்புகளும் ஓராண்டு சான்றிதழ் படிப்பாக நிகழாண்டு முதல் தொடங்க உள்ளன.
மேலும் 2 ஆண்டு பயிற்சி காலம் கொண்ட மருத்துவ ஆய்வக நுட்புநர் படிப்பிற்காக 75 இடங்கள், கதிரியக்க படிப்பிற்காக 20 இடங்கள் ஆகிய டிப்ளமோ படிப்புகள் தொடங்கப் பட உள்ளன.  2016 நவம்பர் முதல் டிப்ளமோ சேர்க்கை அறிவிப்புகள் வெளியிடப்படும். பயிற்சியில் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். நிகழாண்டுக்கான எம்பிபிஎஸ் மருத்துவப்படிப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்கப்படும்.

No comments:

Post a Comment