அலைபேசியில் உள்ள மின்காந்த அலைகள் மெதுவாகக் கொல்லும் விஷம் போன்றவை என்று அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி பேராசிரி யர் சிவானந்தராஜா தெரிவித்தார்.
காரைக்குடி அருகே திருமயம் அடுத்த லெணாவிலக்கு மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பியல்துறை சார்பில் தேசிய அளவிலான நுண்ணனு மற்றும் கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் தகவல் தொடர்புகளின் இன்றைய நிலை குறித்த 2 நாள் தொழில்நுட்பப் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கொண்டு பேராசிரியர் சிவானந்த ராஜா பேசியதாவது: நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போன்று அறிவியல் வளர்ச்சியில் மின்னணு கருவிகள் பயன்பாட்டிலும் நன்மைகளும், பாதிப்புகளும் இருக்கின்றன.
நமது உடம்பில் உள்ள இயற்கையான உஷ்ணம் தேவையான அளவு செல்களை பாதுகாக்கின்றன. மின்னணு கருவிகளை பயன்படுத்துவதால் அதிகமான மின்காந்த அலைகள் நமது உடலில் செலுத்தப்படுகிறது. இதனால் நாம் வாழ்வதற்கு தேவையான நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. இது மெதுவாகக் கொல்லும் விஷத்தைப் போன்றதாகும்.
அலைபேசிகள் அறிவியல் வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறந்த கருவி. அனைவரும் எப்போதும் வைத்திருக்கிறோம். அது வெளிப்படுத்தும் மின்காந்த அலைகளால் நமது உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகின்றன.
இந்த தீய விளைவுகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை இன்றைய இளைஞர்கள் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற பயற்சிபட்டறை பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

No comments:
Post a Comment