Tuesday, 2 September 2014

மீத்தேன் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடக் கோரி கொரடாச்சேரியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்கு முறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். விளை நிலங்களை முற்றிலும் பாதிக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பண பணிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைப் பொதுச் செயலர் காளியப்பன், பேரழிவுக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின் மற்றும் நிர்வாகிகள் முரளிதரன், கல்யாணசுந்தரம், செல்லதுரை, நாகூரான், முரளிதரன், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment