Wednesday, 3 September 2014

நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி அரசு பஸ் மோதியது



நீடாமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் அரசு பஸ் மோதி உயிரிழந்தனர்.
 
பஸ் மோதியது

திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சபூர்கான். இவருடைய மகன் சலீம்கான் (வயது26). விஜயபுரம் மேட்டுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் மகன் யோகேஷ்(26). சலீம்கானும், யோகேசும் நேற்று காலை தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு, மதியம் திருவாரூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். நீடாமங்கலம் அருகே உள்ள வையகளத்தூர் முடுக்குதோப்பு பகுதியில் இவர்கள் சென்ற போது வேளாங்கண்ணியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ்சும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சலீம்கான், யோகேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
 
போலீசார் விசாரணை
விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சலீம்கான், யோகேஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment