Friday, 12 September 2014

திருவாரூரில் லஞ்சம் வாங்கிய தணிக்கை துறை அதிகாரிகள் 3 பேர் கைது சி.பி.ஐ. போலீசார் நடவடிக்கை



ய்த நாள்:

திருவாரூரில் லஞ்சம் வாங்கிய தணிக்கை துறை அதிகாரிகள் 3 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் தணிக்கைதிருவாரூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மாநில தணிக்கை துறையினர் கடந்த 2 நாட்களாக நீதிமன்ற கணக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது சில தவறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சரிசெய்ய லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தணிக்கை துறையினர் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திருவாரூர் உரிமையியல் நீதிமன்ற ஊழியர் பாஸ்கர், சென்னையில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சி.பி.ஐ. போலீசார், லஞ்சம் கேட்ட தணிக்கை துறை அதிகாரிகளை கையும் களவுமாக பிடிக்க வியூகம் வகுத்தனர்.
அதன்படி நேற்று மாலை சி.பி.ஐ. போலீசார் திருவாரூர் வந்து ரசாயன பவுடர் தடவிய பணத்தை பாஸ்கரிடம் கொடுத்து அதை தணிக்கை துறை அதிகாரிகளிடம் கொடுக்கும் படி கூறினர். அதன்படி பாஸ்கர் அந்த பணத்தை விளமல் என்ற இடத்தில் தணிக்கை துறை அதிகாரிகளிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த சென்னை சி.பி.ஐ. போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் தணிக்கை துறையை சேர்ந்த 3 அதிகாரிகளை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த காரையும் சோதனை செய்து, அதில் இருந்த 2 பெரிய பைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான அதிகாரிகள் 3 பேரும் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தணிக்கை துறை அதிகாரிகள் யார்?சி.பி.ஐ. போலீசார் கைது செய்த தணிக்கை துறை அதிகாரிகள் பெயர்விவரம்? அவர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்ட பைகளில் இருந்ததா? என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் தணிக்கை துறை அதிகாரிகளை கைது செய்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment