திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முள்புதரில் ஆதர வற்றுக் கிடந்த பச்சிளம் குழந்தை செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகி ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட விளையாட்டு மைதானம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல் பட்டு வருகிறது. விளையாட்டு மைதானம் அருகில் நீச்சல் குளம் உள்ளது. செவ்வாய்க்கிழ மை அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமாரின் கார் ஓட்டுநர் நெடுஞ்செழியன் அப்பகுதியில் அதிகாலை 5.30 மணியளவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, நீச்சல் குளம் அருகில் புது தேங்காய்ப்பூத்துண்டில் பச்சிளம் குழந்தையின் அழுகுர ல் கேட்டுள்ளது. இதையடுத்து நெடுஞ்செழியன் புதர் பகுதியில் சென்று பார்த்த போது பிறந் து சில நாள்களே ஆன ஆண்குழந்தை என்பது தெரியவந்துள்ளது.குழந்தையை மீட்டுக் கொண்டு வரும் போது, அவ்வழியில் சென்றவர்கள் குழந்தையை த ங்களிடம் கொடுங்கள் நாங்கள் வளர்த்துக்கொள்கிறோம் என்று கேட்டுள்ளனர். அதற்கு குழ ந்தையை அப்படி கொடுக்க முடியாது, முறைப்படி தான் குழந்தையை தத்துக்கொடுக்க முடி யும் என்று கூறிவிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் கொடு த்துள்ளார். இதையடுத்து காவல்துறை சார்பில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தக வல் கொடுக்கப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சிக்காக வந்த மாவட்ட ஆட்சியர் எம். மதிவா ணனிடம் குழந்தையை வளர்த்துக்கொள்கிறேன் என கேட்டவர்களில் ஒருவர் ஆதரவற்றுக் கிடந்த குழந்தையின் விவரத்தை தெரிவித்து குழந்தையை தத்துக்கொடுக்குமாறு கேட்டுள் ளார்.
தகவலையறிந்த ஆட்சியர் விரைந்து குழந்தை இருக்கும் இடத்துக்கு குழந்தையை தனது கா ரில் வைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு மைய த்தில் சேர்த்து, குழந்தை ஆரோக்கியமாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா று மருத்துவர்களிடம் தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை ஆதவற்ற நிலைய ல் கிடந்தது என்ற தகவலையறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். உடனே அக்குழந்தை திருவா ரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் சேர்க்கப்பட்டு குழ ந்தைக்கு முதலுதவி பரிசோதனை சிகிச்சை அளிக்க மருத்துவருக்கு அறிவுறுத்தினேன்.மருத்துவ அறிக்கை வந்ததும் ஆதரவற்ற குழந்தை என்பதால் உரிய விசாரணை மேற்கொ ண்டு, பிறகு சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் தொட்டில் குழந்தைத் திட்ட த்தில் சேர்க்கவும், அரசு அங்கீகாரம் பெற்ற திண்டுக்கல் காந்தி கிராமத்தில் உள்ள கஸ்தூரி பாய் குழந்தைகள் நல மையத்தில் விதிமுறைகளை பின்பற்றி சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ள து என்றார் மதிவாணன்.
நிகழ்வின் போது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கண்ணபிரான், செய்தி மக்கள் தொடா்பு அலுவலர் ரா. நல்லதம்பி, வருவாய் ஆய்வாளா் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.
https://www.youtube.com/watch?v=bYFq9LfJ-Uc&list=UUhcR8SrIiSON4KxmtpwfMgw
No comments:
Post a Comment