சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டதையொட்டி திருவாரூர் நகரில் உள்ள பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். சினிமா தியேட்டர்களில் மாலை, இரவு நேரக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அரசு டாஸ்மாக் கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன. அனைத்து இடங்களிலும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வந்ததால் பல பகுதிகளுக்கு முற்றிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருவாரூரை அடுத்த கமலாபுரம் பாலத்தில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதுசமயம் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவபொம்மையை, அ.தி.மு.க.வினர் எரித்தனர். திருவாரூர்–மன்னார்குடி சாலையில் மரங்களால் தடுப்பு அமைத்திருந்தனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment