Monday 29 September 2014

தமிழக முதல்வராக ஓ . பன்னீர்செல்வம் தேர்வு

 













இரண்டாவது முறை:

அ.தி.மு.க., வின் பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜன., 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார்.1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 சட்டசபை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து, முதன்முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 19ம் தேதி, ஜெயலலிதா தலைமையிலானஅமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவியேற்றார். பின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.இதையடுத்து செப்., 21ம் தேதி முதல்வராக பதவியேற்றார். 2002 மார்ச் 1ம் தேதி வரை பதவியில் இருந்தார்.

 பின் முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றவுடன் இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின் 2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை இழந்தது. இத்தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் பதவிவகித்தார். 2011 சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் இருந்து 3வது முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்ட்டார்.

 இம்முறை நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். மேலும் அ.தி.மு.க., வின் பொருளாளராகவும் இருக்கிறார்.

28.9.14 அன்று தமிழக முதல்வராக  தேர்வு செய்யப்பட்டார் . 

No comments:

Post a Comment