Sunday, 21 September 2014

திருவாரூரில் செப். 23-ல்எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்


திருவாரூர் மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் செப். 23-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் வழங்குவதில் நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் எரிவாயு நிரப்பப்பட்ட உருளைகள் வழங்குவதில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்யும் வகையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில்  23/09/2014 தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளாóகள், எரிவாயு வாடிக்கையாளாóகள் மற்றும் நுகாóவோர் அமைப்பினாó ஆகியோர் பங்கேற்று, எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கலாம்.

No comments:

Post a Comment