|
பனகல் சாலையில் உள்ள பெரும் பள்ளங்கள் |
|
பள்ளத்தில் விழுந்து பழுதான பேருந்து |
திருவாரூர் மாவட்டத்தில் மிக மோசமான நிலையில் பழுதடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மிகச் சிறியப் பேருந்து நிலையமாக இயங்கி வரும் திருவாரூர் பேருந்து நிலையத்தில் அதிகளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் மட்டுமன்றி, வேன், லாரி, கார்கள் மற்றும் கனரக பெரிய வாகனங்களுக்கான போக்குவரத்து பொதுச் சாலையாக இருந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
பேருந்து நிலையம் மற்றும் பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. பனகல் சாலை சாலையில் ஒருபுறம் பள்ளமும், மேடுமாய் உள்ளது. சாலைகளில் ஏற்பட்டுள்ள இப்பள்ளங்களினால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, திருவாரூர் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிக மோசமாக பழுதடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment