Monday, 1 September 2014

நகரங்களில் 'வை - பி'மத்திய அரசு தீவிரம்

 

 பத்து லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில், எளிதாக தகவல் தொடர்பு வசதி கிடைக்க ஏதுவாக, 'வை - பி' வசதி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
வரும் 2018க்குள், இந்தியாவை, 'டிஜிட்டல் மயம்' எனப்படும், முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில், முதற்கட்டமாக, சிறிய நகரங்களில், வைபி எனப்படும், வயர்கள் இல்லாமல், எளிதாக இணையதள வசதியை தொடர்பு கொள்ளும் வசதி மேற்கொள்ளப்பட உள்ளது.
இது குறித்து, தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் மத்திய
அரசு சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. அதில், இந்த சேவைகளை, இலவசமாக வழங்குவதா அல்லது கட்டணம் வசூலிப்பதா என்பது குறித்து முடிவு செய்யவில்லை.

No comments:

Post a Comment