Friday, 5 September 2014

திருவாரூரில் செப். 11-ல் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி



திருவாரூரில் செப். 11-ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட விளையாட்டுப் பிரிவு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செப். 11-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

போட்டியில் பங்கேற்போர், சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வர வேண்டும். போட்டி தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு வயது சான்றிதழுடன் வர வேண்டும். 13 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., 15 மற்றும் 17 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., 13 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவும் போட்டி நடைபெறும்.

சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிமிருந்து கட்டாயம் வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04366- 227158 தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment