Thursday, 31 July 2014
Wednesday, 30 July 2014
திருவாரூர் மாவட்டத்தில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் பகுதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.
ரம்ஜான் பண்டிகை
சந்திரனை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் இஸ்லாமிய நாட்காட்டி யின் படி ஆண்டின் 9–வது மாத மாக வரும் ரமலான் மாதத்தை, முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் மாதமாக கருதி நோன்பு இருக்கிறார்கள். இந்த நோன்பு முஸ்லிம்களின் 5 கடமைகளுள் 3–வது கடமை ஆகும். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு கடந்த மாதம் (ஜூன்) 30–ந் தேதி தொடங்கியது. நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டா டப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் நேற்று ரம்ஜான் பண்டிகையை குதூகலத்துடன் கொண்டாடினார்கள். இதை யொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடை பெற்றன. அதில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சிறிய வர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்று ரம்ஜான் வாழ்த்து பெற்றனர்.
திருவாரூர்
திருவாரூர் கொடிக்கால் பாளையம் முகைதீன் ஆண்ட வர் பள்ளி வாசலில் ஊர் உறவின்முறை ஜமாத் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன் னிட்டு நேற்று இமாம் அப் துல்நாசர் தலைமையில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதற்கான ஏற்பாடு களை ஜமாத் நாட்டாண்மை ரபியுதீன், செயலாளர் ஜாகீர்உசேன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இதேபோல் மேலத்தெரு ஜாமியுல்மஸ்ஜித் பள்ளி வாசலில் இமாம் அப் துல்சலாம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகை யில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை ஜமாத் நாட்டாண்மை ஜெய்னுலாவு தீன், செயலாளர் முகமதுகஜ் ஜாலி மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். திருவாரூர் விஜயபுரம் மஸ்ஜிதுல்பிர்தவுஸ் பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இமாம் சாகுல்அமீது தலைமையில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு களை ஜமாத் நாட்டாண்மை சலாவுதீன், செயலாளர் ஜப ருல்லா மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இதில் திருவாரூர் அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளி வாசலில் இமாம் பீர்முகமது தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஜமாத் நாட் டாண்மை பஷிர்அகமது மற் றும் நிர்வாகிகள் செய்து இருந் தனர்.
Tuesday, 29 July 2014
KODIKKALPALAYAM - ஈதுல் பித்ர் பெருநாள்
கொடிக்கால் பாளையத்தில் நோன்பு ஈகைப் பெருநாள் 29/7/14 செவ்வாய் அன்று கோலாகலமாக கொண்டப்பட்டது .நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மற்றும் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல்களில் சிறப்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது .முஹ்யிதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையை இமாம் அப்துல் ஜப்பார் நடத்தி வைத்தார் ,இமாம் அப்துல் நாசர் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார்கள் .
ஜமாஅத் தலைவர் ரபியுதீன் ,துணை தலைவர் ஜெஹபர் சேக் அலாவுதீன் உள்ளிட்ட ஜமாஅத் தார்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள் .
மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் இமாம் அப்துல் சலாம் நடத்தி வைத்தர்கள் .
பள்ளிவாசல் நாட்டாண்மை ஜெய்னுலாபுதீன் தலைமையில் விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள் .
பெரியவர்களிடம் சிறுவர்கள் வாழ்த்துக்களையும் துவா பெற்று சென்றார்கள் .
ஜமாஅத் தலைவர் ரபியுதீன் ,துணை தலைவர் ஜெஹபர் சேக் அலாவுதீன் உள்ளிட்ட ஜமாஅத் தார்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள் .
மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் இமாம் அப்துல் சலாம் நடத்தி வைத்தர்கள் .
பள்ளிவாசல் நாட்டாண்மை ஜெய்னுலாபுதீன் தலைமையில் விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள் .
பெரியவர்களிடம் சிறுவர்கள் வாழ்த்துக்களையும் துவா பெற்று சென்றார்கள் .
Monday, 28 July 2014
Saturday, 26 July 2014
ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 95 டன் அரிசி
திருவாரூர் மாவட்டத்தில் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக் காக 95 டன் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒருவருக்கு ஒரு நாளைக்கு 150 கிராம் என்ற அடிப்படையில் அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்டத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 28-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு
ரமலான் நோன்புக்காக 68 பள்ளிவாசல்களுக்கு 28,297 பேர் பயன்பெறும் வகையில் 95 டன் பச்சரிசி ஒதுக்கீடு
செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒருவருக்கு ஒரு நாளைக்கு 150 கிராம் என்ற அடிப்படையில் அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்டத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 28-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு
ரமலான் நோன்புக்காக 68 பள்ளிவாசல்களுக்கு 28,297 பேர் பயன்பெறும் வகையில் 95 டன் பச்சரிசி ஒதுக்கீடு
செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் படிவம் 6-ல் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் ( வ ட்டாட்சியர், கோட்டாட்சியர்கள் அலுவலகங்கள், நகராட்சிகள்) கொடுக்கலாம். 18 முதல் 24 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பத்துடன் வயதுக்கான சான்றிதழ் இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். இதேபோல பெயர்
நீக்கலுக்கு படிவம் 7, பெயர், விவரங்களில் திருத்தம செய்ய படிவம் 8, சட்டப்பேரவைத் தொகுதிக்குள் பாகம் மாறியவர்கள் படிவம் 8ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய இடமாற்றம் செய்ய www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் படிவம் 6-ல் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் ( வ ட்டாட்சியர், கோட்டாட்சியர்கள் அலுவலகங்கள், நகராட்சிகள்) கொடுக்கலாம். 18 முதல் 24 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பத்துடன் வயதுக்கான சான்றிதழ் இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். இதேபோல பெயர்
நீக்கலுக்கு படிவம் 7, பெயர், விவரங்களில் திருத்தம செய்ய படிவம் 8, சட்டப்பேரவைத் தொகுதிக்குள் பாகம் மாறியவர்கள் படிவம் 8ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய இடமாற்றம் செய்ய www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
Friday, 25 July 2014
லைலத்துல் கத்ர்
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன
பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி
அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ
மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித்
தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்்: திர்மிதி, நஸயீ,
இப்னுமாஜா, அஹமத்
اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ
فَاعْفُ عَنِّي
லைலத்துல் கத்ர் இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது.
அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக
நபி அவர்கள் புறப்பட்டார்கள்.
அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி அவர்கள் லைலத்துல் கத்ரை உங்களுக்கு
அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து
கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு
நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும்
இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின்
ஸாமித் (ரலி)நூல்: புகாரி, முஸ்லிம்
ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி அவர்கள் இல்லறத் தொடர்பை
நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்.
அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
''எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது.
பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின்
ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்:
புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர்
இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம்
கேட்டேன். அதற்கவர், ‘ஆம்’ நாங்கள் ரமலானின் நடுப்பத்து நாள்களில் நபி(ஸல்)
அவர்களுடன் இஃதிகாஃப இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம்
நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில்,
‘எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது. அதை நான் மறந்து விட்டேன். எனவே, அதைக்
கடைசிப் பத்து நாள்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான்
ஸஜ்தாச் செய்வது போல் கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ
அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்’ எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத்
திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென
மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்க இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள்
ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை
கண்டேன்’ என்று விடையளித்தார். நூல்: புகாரி
Thursday, 24 July 2014
சிறு வாய்க்கால்கள், கால்வாய்களைதூர்வார ரூ. 76 கோடி ஒதுக்கீடு
திருவாரூர் மாவட்டத்தில் சிறு வாய்க்கால்கள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வார ரூ. 76 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
வலங்கைமான் ஒன்றியத்தில் அரவூர், திருவோணமங்கலம், தென்குவளவேலõ, ஆலங்குடி, மாத்தூர், மாணிக்கமங்கலம், கண்டியூர் ஆகியப் பகுதிகளில் நடைபெற்றுவரும் நீர்செறிவூட்டும் திட்டம், தாய் திட்டம், பசுமை வீடு கட்டும் திட்டம், பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் அளித்த பேட்டி:
மாவட்டத்தில் கடந்த 2013-2014-ம் நிதியாண்டில் 20,659 பணிகள் ரூ. 272 கோடியில், 2014 - 2015-ம் நிதியாண்டில் 11,280 பணிகள் மேற்கொள்ள ரூ. 96 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்ய அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் நீர்மட்டத்தை உயர்த்த 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் 5,160 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் சிறிய, பெரிய பாசன வாய்க்கால்கள் ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ் தூர்வார ரூ. 76 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வலங்கைமான் பகுதியில் 2014-2015-ம் நிதியாண்டில் ரூ. 10 கோடியில் 1,286 பணிகள் செய்ய அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் மதிவாணன்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் உ. தமிழரசி, வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் தில்லை நடராஜன் ஆகியோர் உடனிருந்தார்.
வலங்கைமான் ஒன்றியத்தில் அரவூர், திருவோணமங்கலம், தென்குவளவேலõ, ஆலங்குடி, மாத்தூர், மாணிக்கமங்கலம், கண்டியூர் ஆகியப் பகுதிகளில் நடைபெற்றுவரும் நீர்செறிவூட்டும் திட்டம், தாய் திட்டம், பசுமை வீடு கட்டும் திட்டம், பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் அளித்த பேட்டி:
மாவட்டத்தில் கடந்த 2013-2014-ம் நிதியாண்டில் 20,659 பணிகள் ரூ. 272 கோடியில், 2014 - 2015-ம் நிதியாண்டில் 11,280 பணிகள் மேற்கொள்ள ரூ. 96 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்ய அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் நீர்மட்டத்தை உயர்த்த 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் 5,160 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் சிறிய, பெரிய பாசன வாய்க்கால்கள் ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ் தூர்வார ரூ. 76 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வலங்கைமான் பகுதியில் 2014-2015-ம் நிதியாண்டில் ரூ. 10 கோடியில் 1,286 பணிகள் செய்ய அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் மதிவாணன்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் உ. தமிழரசி, வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் தில்லை நடராஜன் ஆகியோர் உடனிருந்தார்.
Wednesday, 23 July 2014
சிவசேனா எம்.பி.க்கள் மீதான புகார்; பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் கடும் அமளி
சிவசேனா எம்.பி.க்கள் மீதான புகார் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.
ரம்ஜான் நோன்பு இருந்த இஸ்லாமியர் ஒருவரை வற்புறுத்தி சப்பாத்தி சாப்பிட வைத்ததாக சிவசேனா கட்சி எம்.பி.,க்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள மராட்டிய மாநில இல்லத்தில் உணவு வழங்கும் பணியினை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் கவனித்து வருகிறது. கடந்த வாரம் மராட்டிய பவனுக்கு வந்த 11 சிவசேனா எம்.பி.,க்கள் தங்களுக்கு சாப்பிட மகாராஷ்டிர உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சப்பாத்தியை பரிமாறியுள்ளனர். இதனால் சிவசேனா கட்சியின் எம்.பி.க்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். பின்னர் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக சப்பாத்தியை சாப்பிட வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேற்பார்வையாளராக இருந்த அர்ஷத் என்ற இஸ்லாமியர் ரம்ஜான் நோன்பு இருந்துள்ளார். அப்போது சிவசேனா எம்.பி.க்கள் அவரிடம் இவ்வாறு நடந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர தலைமைச்செயலாளர் சகாரியாவுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சிவசேனா எம்.பி.,க்கள் மறுத்துள்ளனர். நாங்கள் யாருடைய நோன்பையும் கலைக்க வலியுறுத்தவில்லை. இவை அனைத்து பொய்யான குற்றச்சாட்டுக்கள். நாங்கள் மிகவும் தரம் குறைந்த உணவு மற்றும் தரமற்ற சேவைக்கே எதிர்ப்பு தெரிவித்தோம். என்று சிவசேனா கட்சியின் எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறியுள்ளார்.
இந்நிலையில் இவ்விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இவ்விவகாரத்தை எழுப்பி பிற கட்சியின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைகள் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை 12:30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக பேசிய பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி வெங்கையா நாயுடு, இது ஒரு முக்கியமான விஷயம். இதில் உண்மை யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். பின்னர் நாம் இதுகுறித்து பேசுவோம். என்று கூறினார்.
இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குறிப்பிட்ட சிவசேனா கட்சியின் எம்.பி.க்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Tuesday, 22 July 2014
வெளியூர் மௌத் அறிவிப்பு 23/7/2014
நமதூர் நடுத்தெரு கோழி முட்டைவீட்டு நியாஸ், பெருஸ் ,அத்தாப் இவர்களின் சிறிய தாயாரும் , அடியக்கமங்கலம் அப்துல் வாதுத் அவர்களின்
மனைவியுமான செல்லக்கனி என்கிற அவர்கள் அடியக்கமங்கலம் ஹை ஸ்கூல் தெருவில் மௌத் .
அன்னாரின் ஜனாஸா 23/07/14 புதன் கிழமை மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுள் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது .
வெளியூர் மௌத் அறிவிப்பு 23/07/14
நல்ல சமுதாயத்தை உருவாக்குவது மாணவர்களின் கடமை
நல்ல சமுதாயத்தை உரு வாக்குவது மாணவர் களின் கடமை என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
விலையில்லா மடிக்கணினி-சைக்கிள்
திருவாரூரை அடுத்த புலி வலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடிக்கால் பாளையம் பள்ளி உள்ளபட 10 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு திருவாரூர் உதவி கலெக்டர் பரம சிவம் தலைமை தாங்கினார். கோபால் எம்.பி., மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட் சுமிஅம்பிகாபதி, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் மலர் மணிகண்டன், நகரசபை தலைவர் ரவிச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி களையும், விலையில்லா சைக் கிள்களையும் வழங்கி பேசி னார். அப்போது அவர் கூறிய தாவது:-
மாணவர்களின் கடமை
மாணவர்கள் தங்கள் அறி வுத்திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா மடிக் கணினி வழங்கி வருகி றார். இதை மாணவர்கள் முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரு வாரூர் மாவட்டத்தின் வளர்ச் சியில் மாண வர்களுக்கு முக் கிய பங்கு உள்ளது. எனவே மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். மடிக்கணினி மூலமாக நல்ல விஷயங்களை கற்று, நல்ல சமுதாயத்தை உரு வாக்க பாடுபட வேண்டும். நல்ல சமுதாயத்தை உருவாக் குவது மாணவர்களின் கடமை. மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் லட்சியத்தை அடையலாம். வாழ்க்கையில் வெற்றி அடைய கல்வி மிகப் பெரிய அடித்தளம். அதை சரி யாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பெற்றோரின் கன வுகளை மாணவர்கள் நினை வாக்க வேண்டும்.
புரட்சி
தமிழக அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.52 கோடியே 64 லட்சத்து 58 ஆயிரத்து 504 மதிப்பில் 31 ஆயிரத்து 988 மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட் டுள்ளன. இதேபோல் ரூ.15 கோடியே 30 லட்சத்து 10 ஆயிரத்து 728 மதிப்பில் 40 ஆயிரத்து 716 சைக்கிள்களும் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு கல்வியில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு காலணி முதல் கணினி வரை வழங்கி வருகிறது. இந்தியாவே பாராட் டுகின்ற வகையில் தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கூட்டுறவு சங்க தலைவர்கள் மணிகண்டன், முருகானந்தம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவசுப்பிர மணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்வேல், கலாராணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ண மூர்த்தி, வனிதாஜோதிபாசு, ராஜா, கண்ணன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதி வைப்பூர்தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் நிர்மலா வரவேற் றார்.
முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் நன்றி கூறி னார்.
Monday, 21 July 2014
ரமலான் பிறை 22 - தினா அப்பா முறை
Sunday, 20 July 2014
•திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை தேவை''
ஸ்பெஷல்
இன்னும் அணையாத கும்பகோணத் தீ
கருணாநிதி, ஜெயலலிதா இடையே மஞ்சள்கோடு!
அவங்க அரசியல்ல ஈடுபடுவாங்கனு நாங்க யாருமே நினைக்கலை. ராஜாஜி...ஸ்பெஷல்
ஸ்பெஷல்
'எங்களை யாராச்சும் காப்பாத்துவாங்களா?'
மனதுக்கு மருந்து... வீட்டுக்கு வருமானம்
கிராஃப்ட் பொருட்கள் செய்யறதுக்கான மெட்டீரியல்களை வாங்கக்கூட. . ....உணவு என்பது... ஸ்டேட்டஸ் அல்ல!
சுவைக்கு முக்கியத்துவம் தருவதைவிட, சத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இட்லி,...ஸ்பெஷல்
ஸ்பெஷல்
ஸ்பெஷல்
பட்ஜெட் 2014 பலன் தரும் பங்குகள்!
பட்ஜெட் 2014-15 முழு அலசல் மீட்டிங்
நாணயம் விகடனும் குட்வில் கமாடிட்டி நிறுவனமும் இணைந்து நடத்திய...ஸ்பெஷல்
ஸ்பெஷல்
பன்னீர் திராட்சை...!
கருகும் மல்லிகை... மருகும் விவசாயிகள்
விவசாயிகளின் அறியாமையையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாக்கிக் கொண்டு, 'கல்லா’ கட்டும்...- ஜூனியர் விகடன்
- /
- 23 Jul, 2014
- /
- திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை தேவை''
ருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை தேவை''
ஊழியர்களின் வேதனைக் குரல்
'எத்தனை கோடி செலவுகள் செய்து மருத்துவமனை கட்டினாலும், அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையாக இருந்தால் நோயாளிகளுக்கு என்ன பிரயோஜனம்? மருத்துவக் கல்லூரி முதல்வர் அராஜகமாக அத்துமீறி லஞ்சம் பெறுக¤றார். இதை யாருமே கண்டுகொள்ள மாட்டார்களா?’ - திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் இப்படியோர் அங்கலாய¢ப்பு கடிதம் ஜூ.வி அலுவலகத்துக்கு வந்தது.
திருவாரூர் மருத்துவக் கல¢லூரி மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தோம். அகில இந்திய ஜனநாயக மாணவர் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.
''மருத்துவமனையில் டாக்டர்கள்தானே முக்கியம். அதுவே, பற்றாக்குறையாக இருந்தால், நோயாளிகளுக்கு எப்படி நோய்கள் குணமாகும்? மருத்துவமனை கண்காணிப¢பாளர், மருத்துவமனை நிலைய அதிகாரி, உதவி நிலைய அதிகாரி முதல் ஊழியர்கள் வரை பணியிடங்கள் நிறைய காலியாக இருக்கின்றன. மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, இருக்கிற மருத்துவர்களாவது சரியான நேரத்துக்கு வந்து நோயாளிகளைக் கவனிக்க வேண்டும். ஆனால், அப்படி செய்வது இல்லை.
போதுமான வசதிகள் இல்லாததால் எலும்பு முறிவு, சாலை விபத்துகள் ஏற்பட்டால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத¢துவமனைக்குப் பரிந்துரை செய்கிறார்கள். மருத்துவமனை தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யும் அளவுக்கு, இன்னும் பின்தங்கிய மருத்துவமனையாகவே இருக்கிறது. மருத்துவர்கள் பக்கத்திலேயே இருக்க வேண்டிய எமர்ஜென்சி வார்டுகளில், ஒருமுறை மட்டுமே விசிட் அடித்துவிட்டுச் செல்கிறார்கள். அட்மிஷன் போட வேண்டிய நோயாளியாக இருந்தால், 'வார்டை போய் பாருங்கள். ப¤டித்திருந்தால் அட்மிஷன் போட்டுக்கொள்ளுங்கள்’ என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள்.
ஆபரேஷன் செய்வதற்கு உடனடி ரத்தம் தேவைப்பட்டால், வெள¤யில் இருந்துதான் வாங்கிக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால், எவ்வளவு சீரியஸான அறுவைசிகிச்சையாக இருந்தாலும் செய்வது இல்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. 108 மற்றும் அறக்கட்டளை ஆம்புலன¢ஸ்கள்தான் பயன்படுத்தப்படுகின¢றன. நிறைய ஊசி மற்றும் மருந்துகளை மருத்துவமனை உள்ளே இருக்கும் பிரைவேட் மெடிக்கல் ஷாப்பில் வாங்கிவரச் சொல்கிறார்கள்.
அமைச்சர்கள், ஆட்சியர் விசிட் வரும்போது மட்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து டாக்டர்கள் இருப்பதாக கணக்கு காட்டிவிடுகிறார்கள். சுகாதாரமான குடிநீர் வசதி கிடையாது. மருத்துவமனையில் கொடுக்கப்படும் சாப்பாட்டை நோயாளிகள் யாரும் சாப்பிடுவது இல்லை. வெளியில் இருந்தும், வீட்டில் இருந்தும் எடுத்து வந்துதான் சாப்பிடுகிறார்கள். போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்போதுதான் கட்டமைப்பு வசதி அவசர அவசரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதைக் காரணமாக வைத்து இப்போதுதான் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
''மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சின்னப்பன் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மருத்துவமனை சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் கமிஷன் வாங்குகிறார். எதற்கு இவ்வளவு பணம் என¢று கேட்டால், நீங்கள் கொடுக்கிற பணத்தை கீழிருந்து மேல்மட்டம் வரை கொடுக்க வேண்டும் என்கிறார்'' - இப்படியோர் அதிர்ச்சி தகவலும் அந்தக் கடிதத்தில் பதிவாகி இருந்தது.
மருத்துவக் கல்லூரி முதல்வர் சின்னப்பனைச் சந்தித்துப் பேசினோம். ''ஹாஸ்டல் வசதி மாணவர்களுக்குப் போதுமானதாக இல்லை என்று சொல்லி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கவில்லை. இப்போது கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திவிட்டதால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கிவிட்டார்கள். நான் நேர்மையாகத்தான் இருக்கிறேன். நேர்மையாகத்தான் செயல்படுகிறேன். மருத்துவமனை ஊழியர்களிடம் கண்டிப்பு காட்டுவேன¢. என்மீது சுமத்தப்படுகிற அனைத்து குற்றச்சாட்டுகளும் என் மேல் உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் சொல்லப்படுவது. இங்கு உள்ளவர்கள் யாரோ ஏதேதோ எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அதெல்லாம் பொய்யான தகவல்'' என்று மறுத்தார்.
மருத்துவ சேவை என¢பது புனிதமானது. அந்தப் புனிதமான சேவையில் லஞ்சம் புரையோடினால் மனித சமுதாயம் சீரழியும் என¢பதை உணர்ந்து செயல்பட வேண்டும்!
- ஏ.ராம்
படங்கள்: கே.குணசீலன்
|
|
Month
|
Year
|
- 'இன்ஜினீயரம்மா!'
- பெருகிவரும் பழிக்குப் பழி வன்முறை!
- கல்லா கட்டும் காக்கிகள்... பார்ட்டி வைக்கும் காலிகள்!
- கூட்டல்... கழித்தல்.. ஊழல்!
- 'குடும்பத்துக்கு அடங்காதவங்களுக்கு இதுதான் கதி...'
- திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை தேவை''
- சரக்கு... பொண்ணு... கிரிமினல்!
- முருகன் கோயிலில் எலெக்ட்ரிக் எமன்
- பொதுநல வழக்குத் தொடர்ந்தவர் மீது பொய் வழக்கா?
Please wait while we process your request ...
நான்டுகள்
நாண்டுகல்
நாண்டுகள்
நானடுகள்
னாண்டுகள்
naandugal
Subscribe to:
Posts (Atom)